செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:42 IST)

திமுக கோடீஸ்வரர்களின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் !

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த  உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிமுக விருப்பமனு விநியோகத்தை துவங்கியுள்ளது.

மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.25,000, நகராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.10,000, வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.500 என அதிமுக நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஏழைகளின் கட்சி எனவும் திமுக கோடீஸ்வரர்களின் கட்சி எனவும் பேசினார். திமுக மேயர் பதவிக்கான விருப்பமனுக் கட்டணமாக 50000 ரூ என அறிவித்துள்ளது. இதைக் குறிப்பிடும் விதமாக அவர் பேசி அவர் திமுகவை சீண்டியுள்ளார்.