ஜெயேந்திரர் உடல் நலம் பாதிப்பு: ஆந்திரா மருத்துவமனையில் சிகிச்சை
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சர்ஸ்வதி உடல் நலக்குறைவால் ஆந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சர்ஸ்வதிக்கு(81) விஜயவாடாவில் ஒரு மடம் உள்ளது. அங்கு தங்கியிருந்த போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனே அவர் ஆந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.