1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (15:22 IST)

இறுதியாக செய்தியாளர்களை சந்திக்க விரும்பிய ஜெயலலிதா: தடுத்தார் சசிகலா?

இறுதியாக செய்தியாளர்களை சந்திக்க விரும்பிய ஜெயலலிதா: தடுத்தார் சசிகலா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் போராட்டத்துக்கு பின்னர் மரணமடைந்தார்.


 
 
அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருந்தார். ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும், வீடியோவை வெளியிட வேண்டும், ஆடியோவை வெளியிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் யாரும் அதற்கு செவிசாய்க்கவில்லை. கடைசியில் அவரின் பூத உடலை தான் தமிழகம் கண்டது.
 
இதனால் அவரது மரணத்தில் இன்றுவரை சந்தேகத்தையும், மர்மங்களையும் கிளப்பி வருகின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தில் அதிகமாக குற்றம் சாட்டப்படும் நபர் அவரது தோழி சசிகலா தான். காரணம் அவர் தான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் கடைசி வரை கூடவே இருந்து, யாரும் ஜெயலலிதாவை பார்க்க விடாமல் கவனித்து வந்தார்.
 
இதனால் சசிகலா மீது ஏகப்பட்ட கேள்விகளை அதிமுக தொண்டர்களே எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் பகீர் தகவல்களை பிரபல தமிழ் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ளார்.
 
அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சில நாட்களில் உடல்நலம் தேறியிருந்தார். அப்போது செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்து தன்னுடைய நிலமை பற்றி வெளியுலகத்துக்கு தெரிவிக்க விரும்பியதாகவும் அதனை சசிகலா தடுத்துவிட்டதாகவும் அந்த போலீசார் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.