1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (16:55 IST)

ஜெயலலிதாவை அப்பல்லோவில் கவனித்த நர்ஸ் தற்கொலை முயற்சி!

ஜெயலலிதாவை அப்பல்லோவில் கவனித்த நர்ஸ் தற்கொலை முயற்சி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கவனித்து வந்த குளோரியா என்ற நர்ஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளது சந்தேகத்துக்குறிய முறையில் பார்க்கப்படுகிறது.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
 
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் கவனித்துக்கொண்ட அயனாவரத்தை சேர்ந்த நர்ஸ் குளோரியாவின் கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
 
இந்த சூழலில் நர்ஸ் குளோரியாவும் தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரும் அவரது குழந்தையும் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் கவனித்துக்கொண்டவர் என்பதாலும், அவரது மரணத்தில் மர்மம் நீடித்து வருவதாலும் குளோரியாவின் தற்கொலை முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.