1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (11:02 IST)

ஜெயலலிதாவை திமுக மானபங்கப்படுத்தவில்லை! அது ட்ராமா! – 1989 சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின்!

MK Stalin
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் ஒருமுறை சட்டமன்றத்தில் திமுகவினரால் மானபங்கப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடக்கவே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் 1989ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடையை கிழித்து திமுகவினர் மானபங்கம் செய்ததாக சுட்டிக்காட்டி பேசினார்.

இது சர்ச்சையான நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “நிர்மலா சீதாராமன் வாட்ஸப் வரலாற்றை படித்துவிட்டு பேசுவார். ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சட்டமன்றத்தில் அப்படி செய்ய வேண்டும் என தனது வீட்டில் அவர் ஒத்திகை பார்த்தார் என்று அவருடன் அப்போது அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசு அவையில் பேசியது இன்றும் அவைக் குறிப்பில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K