1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (08:14 IST)

புத்தர், ஏசு, காந்தி மூன்றும் கலந்த கலவை தான் ஜெயலலிதா: சட்டசபையில் புகழாரம்!

புத்தர், ஏசு, காந்தி மூன்றும் கலந்த கலவை தான் ஜெயலலிதா: சட்டசபையில் புகழாரம்!

தமிழக சட்டசபையில் நேற்று நடந்த மானிய கோரிக்கையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சரும், தற்போதையை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் புத்தர், ஏசு, காந்தி என வர்ணித்து பாடினார்.


 
 
தமிழக சட்டசபையில் தற்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பாட்டுப்பாடி முதல்வரை வாழ்த்துவதையும், புகழ்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் முதல்வரை புகழ்வதையே நோக்கமாக கொண்டுள்ளனர். கவிதை வாசிப்பது, சினிமா பாடல்களை பாடி புகழ்வது என தொடர்கதையாக இது நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், இங்கிலாந்தை செம்மைப்படுத்திய தாட்சர் போல, சிங்கப்பூரை உருவாக்கிய லி குவான் யூ போல, மலேசியாவை மேம்படுத்திய மகாதிர் போல, தமிழகத்தை வளப்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மா என ஆரம்பித்து பேசினார்.
 
பின்னர் திடீரென  புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ,தோழா ஏழை நமக்காக என்று பாடி, பின்னர் விளக்கமும் அளித்தார். புத்தனின் ஞானமும், ஏசுவின் கருணையும், காந்தியின் துாய உள்ளம் என்ற மூன்றையும் ஒருங்கே கொண்டவர் எங்கள் அம்மா என்றார்.