மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி என்ற திட்டத்தினை முதன்முதலில் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்றும், அவரது வழியில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயலாற்றி வருகின்றார் என்றும் கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் அருகே, திருமாநிலையூர் பகுதியில் மக்களை தேடி மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும், 29 வார்டு செயலாளர் சம்பத் அனைவரையும் வரவேற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் சென்று மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
மேலும் முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது., ஆரம்ப காலத்தில் 12 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகையும், விதவை உதவித்தொகையும் வழங்கிய நிலையில், தற்போது படிப்படியாக உயர்த்தி 29 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இன்னும் தேவைகள், இருக்கின்றது, தற்போது மனுக்கள் வாங்கும் போதெல்லாம்., முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை எல்லாம் மனுக்கள் தான் அதிகமாக வருகின்றது. ஆகவே தான் 5 லட்சம் மக்களுக்கு விடுபட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை எல்லாம் கொடுக்க வேண்டுமென்றும், தமிழக முதல்வர் உத்திரவிட்டுள்ளார்.
ஆகவே, மீண்டும் அவர்களுக்கு அந்த திட்டங்கள் வழங்கப்படும் என்றார். மேலும், இதே போல, இலவச வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டுகள் வேண்டுமென்றெல்லாம், மனுக்கள் வருகின்றது. ஆகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது ஆட்சியில் பொதுமக்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், திருமணம் ஆகும் போது ஏழை மக்களின் மகளுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வழங்கப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.