1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2016 (17:29 IST)

மானம், அவமானத்தை பார்த்தா முடியுமா? - அதிமுக கூட்டத்தில் ஆதினம் அலப்பரை

வருகிற 19ம் தேதி, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதினம் கலந்து கொண்டு பேசினார்.


 

 
நிதி அமைச்சர் ஓ.பன்னிர் செல்வம் முதல் கொண்டு பலர் அதில் கலந்து கொண்டனர். அதில் ஆதீனம் பேசியதாவது:
 
புரட்சித்தலைவி அம்மாதான் பத்து கோடி தமிழர்களின் தாய்.. அந்த வகையில் நானும் அவருக்கு மகன்தான். மானம், அவமானத்தை பார்த்தால் சமூதாயப்பணி கெட்டுவிடும். அதைப்பற்றி கவலைப்படாமல் அதிமுகவை ஆதரிக்கிறேன்.
 
அதிமுக ஆட்சி நடப்பதால்தான் தமிழகத்தில் ஆன்மீகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அம்மாதான். அவருடைய அறிவாற்றலை கண்டு உலகமே வியக்கிறது. உலகத்தில் எந்த தலைவருக்கும் நடக்காத பிரார்த்தனைகள் அவருக்காக நடக்கிறது. 
 
கடவுள்தான் திருப்பரங்குன்றம் வேட்பாளராக ஏ.கே.போஸ் பெயரை அம்மாவிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். அம்மாவும் அவரையே அறிவித்துள்ளார். எனவே அவருக்கே ஓட்டு போட்டு, அதிமுகவை வெற்றியடைய செய்யுங்கள்” என்று பேசினார்.