ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (12:52 IST)

ஜெயலலிதா அரசை விட கொடுமையானது எடப்பாடி அரசு

ஜெயலலிதா அரசை விட கொடுமையானது எடப்பாடி அரசு
திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் என்ற நான்கு தோழர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 


 
 
ஏன் என்றால் வனவாசம் ! எதற்கு என்றால் சிறை வசம் ! அது வெள்ளையர் ஆட்சி
 
ஏன் என்றாலும் எதற்கு என்றாலும் அவதூறு வழக்கு;   அது அம்மையார் ஆட்சி
 
ஏன் என்றால் CBI ரைய்டு  !  அது மோடியின் ஆட்சி (OPS க்கும் EPS க்கும் தமிழில் பிடிக்காத வார்த்தை ஏன்!   எல்லாம் ரெய்டு  செய்யும் மாயம்) 
 
எதற்கு என்றால் குண்டர் சட்டம் !  அது எடப்பாடி ஆட்சி.
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி தவறு என்றால் அதை இந்த அரசு தடுக்குமே ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்வதில் தவறு இல்லை. ஊழல்வாதிகள் மேல் குண்டர் சட்டம் பாயுமே, ஆனால் இந்த குரூப் எல்லாம் புழல் தான்.  
 
இந்த ஆட்சிக்குதான் கேள்வி கேட்கும் தைரியம் இல்லை. கேள்வி கேட்பவர்களையும் நான் ஜெயிலில் அடைப்பேன் என்றால் அதன் பெயர் என்ன? மேதகு முதல்வர் அவர்களே ! தமிழகம் இரு பெரும் சாம்பவான்களுக்கு பிறகு இரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் ஆட்சியை கண்டு வருகிறது. எசமான் சுற்றி விட, பொம்மைகள் தலையை ஆட்டி தனது ராஜ விசுவாசத்தை காட்டி வருகிறது.

ஜெயலலிதா அரசை விட கொடுமையானது எடப்பாடி அரசு


இரா காஜா பந்தா நவாஸ்
பேராசிரியர்
[email protected]