செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (08:12 IST)

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை; புதுவை ஆளுநர் தமிழிசை..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டதாக சமீபத்தில் பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார் என்பதும் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் வாட்ஸ் அப் செய்திகளை பார்த்து நிர்மலா சீதாராமன் பொய்யான தகவலை கூறுகிறார் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து கூறிய போது சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் அப்போது தனது தந்தை குமரி ஆனந்தன் எம்எல்ஏவாக இருந்தார் என்றும் அவர் தான்  எதிர்க்கட்சி தலைவர்கள் மீது புத்தகங்களை தூக்கி எறிந்த போது தடுத்ததாகவும் அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார் 
 
அந்த காயம் பொய்யானது என்று சில எம்எல்ஏக்கள் கூறியபோது எக்ஸ்ரே எடுத்து காண்பித்து அது உண்மை என்று நிரூபித்தார் தனது தந்தை என்றும் எனவே சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
 
Edited by Siva