1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:02 IST)

சினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்- நடிகை ஜெயலட்சுமி

snehan
பாடலாசிரியர் சினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என நடிகை ஜெயலட்சுமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சினேகன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை சினேகன் நடத்தி வரும் நிலையில் அதே பெயரில் ஒரு அறக்கட்டளையை நடத்தி நடிகை ஜெயலட்சுமி நடத்தி அதற்காக பணம் வசூல் செய்வதாக காவல்துறையில் சினேகன் புகார் அளித்திருந்தார்
 
இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள நடிகை ஜெயலட்சுமிநான் முறைப்படி சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன் என்றும் என்னை ஒரு பெண் என்றும் பாராமல் என் மீது அவதூறு பரப்பி உள்ளார் என்றும் என் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திய சினேகன் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் விளம்பர புகழுக்காக சினேகன் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்றும் திமுகவுக்கு அவர் விலைபோய் விட்டாரா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது