1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says MK Alagiri political entry will create mess in DMK

அழகிரி அரசியலுக்கு வரட்டும், திமுகவுக்கு ஆப்பு இருக்கு... ஜெயகுமார் ஆருடம்!

தமிழகம்
அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது. 
 
ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறினார். மேலும், அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் ஜனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருந்த நிலையில், தற்போது அதிமுக அமைச்சர் ஜெயகுமார், மு.க.அழகிரி அரசியல் பிரவேசம் திமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
சென்னைக்கு வரவழைக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ பூங்கோதை: உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு!