பிரச்சார களத்தில் உதயநிதி: முதல் 10 நாட்கள் ப்ளான் ரெடி!!
திருக்குவளையில் இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
தற்போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அறிவித்துள்ளதன்படி எதிர்வரும் நவம்பர் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான எடப்பாடியிலிருந்து திமுக எம்.பி.கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். இதனைத்தொடர்ந்து அவர் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 10 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதேசமயம் தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினும் 100 நாள் பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன தேவை என்ப்தை தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் உதவுவார் என தெரிகிறது.