வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (12:31 IST)

திமுக வின் B டீம் அமமுக - ஜெயகுமார் சாடல்!

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் தி.மு.க வெற்றி பெற அ.ம.மு.க உதவியதால் அவர்கள் தி.மு.க வின் B டீம் என்பதை உறுதிபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

 
அதிமுக கூட்டணியில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், தி.மு.கவைப் போல் அ.தி.மு.க அரசு ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று செயல்படவில்லை என்றும்,  கூட்டணியைப் பொறுத்தவரையில் கட்சிப் பாகுபாடின்றிதான் அ.தி.மு.க அரசு செயல்படுவதாகவும்,  தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை, தேமுதிகவின் உணர்வு மதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
 
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்செந்தூரில் மகளிரணி குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.  அதற்கு முன்பாக தினத்தந்தி குழுமத்தின் அதிபரர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.