ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (07:52 IST)

‘வாழை’ என்னுடைய கதை என்று சொன்ன எழுத்தாளர் சோ தர்மனுக்கு மாரி செல்வராஜின் பதில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை ஒட்டி இருப்பதாகவும் நாங்கள் அச்சு ஊடகத்தில் பேசியதை மாரி செல்வராஜ் சினிமா ஊடகத்தில் பேசியுள்ளார் என்றும் பிரபல எழுத்தாளர் சோ தர்மன் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து சோ தர்மனின் கதையை திருடிதான் மாரி செல்வராஜ் வாழை திரைப்படமாக எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் மாரி செல்வராஜை விமர்சித்து பதிவுகளை எழுதி வருகின்றனர். இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் வாழையடி என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன் . இதோ அந்த வாழையடி சிறுகதை . அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி” எனக் கூறி அவரின் வாழையடி சிறுகதையின் லிங்கைப் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ்.

வாழையடி சிறுகதையை படித்த பலரும் அந்த கதைக்கும் மாரி செல்வராஜின் வாழையடி சிறுகதைக்கும் சிறுவரகள் வாழைத் தார் தூக்குகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.