புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (17:42 IST)

தமிழகத்தில் தரமற்ற உணவுகள் அழிப்பு, ரூ.10.27 லட்சம் அபராதம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் அளவுள்ள குட்கா, பான்மசாலா கடந்த 2 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 கடந்த சில நாட்களாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் அதிரடியாக சோதனை செய்து ஏராளமான கெட்டுப்போன உணவுகளை  அழித்ததாகவும் அந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran