ரேசனில் 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும்- அமைச்சர்

i periyasamy
sinoj| Last Modified திங்கள், 26 ஜூலை 2021 (16:46 IST)

தமிழகத்தில் காலியாக உள்ள ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.


தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்
.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் காலியாக உள்ள கடை ஊழியர்களின் பணி நிரப்பப்படும் எனவும், மாதம் 30 நாட்களும் ரேசன் கடைகளில் மாதம் 30 நாட்களும் மக்களுக்குப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :