துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் ஐடி ரெய்டு: பரபரப்பு தகவல்
தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட கர்நாடக அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அம்மாநில முதல்வர் குமாரசாமி கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை அடுத்து தற்போது தமிழகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு தொடங்கிவிட்டது. அதன்படி காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்ய வந்த அதிகாரிகள் வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் முரண்பட்டுப் பேசியதால் அவர்களிடம் தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
