வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (10:49 IST)

மாணவர்களுக்கு சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் ஐடி ரெய்டு..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் கடந்து சில நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அவரது சகோதரர் வீடு உள்பட பல இடங்களில் சோதனை தொடர்ந்து ஆகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தரபரிபூரணம் என்பவர் தான் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கும் விநியோகம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva