1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (07:54 IST)

சென்னையில் நடைபெறுகிறது விஜய்-மாணவர்கள் சந்திப்பு.. ஜூலை 3ஆம் தேதி என தகவல்..!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி சென்னை மதுரவாயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்களை விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வழியாகியுள்ளன.
 
10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாகவும் ஜூலை 3ஆம் தேதி இந்த சந்திப்பு சென்னை மதுரவாயிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், தொகுதிக்கு ஆறு மாணவர்கள் இரண்டு பெற்றோர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் மாணவர்கள் பெற்றோர்கள் உள்பட சுமார் 6000 பேர் இந்த சந்திப்பில் பங்கேப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர்களுடைய உயர்கல்விக்கு அனைத்து செலவுகளையும் நடிகை விஜய் ஏற்பார் என்ற அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva