1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (16:06 IST)

வருமான வரி சோதனை - சென்னையில் ரூ.10 கோடி பறிமுதல்

சென்னை சவுகார்பேட்டையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி சிக்கியுள்ளது.


 

 
கருப்புப் பண ஒழிப்பு என்ற முழக்கத்த எடுத்த மத்திய அரசு முதலில் மக்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளது. அதன் பின் இந்தியாவில் உள்ள பல பண முதலைகளிடம்  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
அந்த சோதனைகளில் பல கோடி மதிப்பிலான கருப்புப் பணம் சிக்கி வருகிறது. சமீபத்தில் சென்னையில் சேகர் ரெட்டி என்ற தொழிலதிபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகை வியாபாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
அந்த பணத்தை ஏன் அவர் வங்கியில் செலுத்தவில்லை?.. அப்படியெனில் அவை கருப்பு பணமா? என அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.