சிறுவயதிலேயே 4 கட்சிகள் மாறி வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்கும் நிலையாக ஒரு இடத்தில், ஒரு கட்சியில் நிற்க மாட்டார் என்றும், எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் எப்போதும் பொதுமக்களுக்கு நன்றி சொல்பவன் தான் இந்த தம்பித்துரை என்று கரூர் அருகே தம்பித்துரை பேசினார்.
கரூர் மக்களவை தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரும், அ.தி.மு.க தலைமை கொள்கைபரப்பு செயலாளருமான தம்பித்துரை, ஆங்காங்கே தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகின்றார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் அ.தி.மு.க சார்பில் கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் தம்பித்துரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து பள்ளப்பட்டி பேருந்து நிலையம், ஷா நகர், அரவக்குறிச்சி, வடுகப்படி, கோயிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் திறந்த வெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்த தம்பித்துரை, பள்ளப்பட்டி பகுதிக்கு காவிரி குடிநீர் வரும் காலங்களில் வர உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்துக்கலாம் ஏன் எடுக்கவில்லை என்றால் அந்த காரணத்தினையும் கூறினார்.
இப்பகுதியின் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, ஜெயித்தவுடன் எடப்பாடி அரசினை கவிழ்க்க தான் கட்சி விட்டு கட்சி மாறி, இந்த சிறு வயதில் 4 – 5 கட்சிகளுக்கு மாறி விட்டார்., ஆட்சியினை கவிழ்க்க அவர் காட்டிய தீவிரத்தினை, இந்த பகுதி மக்களின் நலனில் செலுத்தி இருந்தால் தற்போது இடைத்தேர்தல் வந்திருக்காது என்றதோடு, நிச்சயம் ஜெயித்தவுடன் காவிரியின் கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தி, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாகவும் அவர் உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த., அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை, தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையினை ஒன்றினை வெளியிட்டுள்ளதாகவும், பலமுரண்பாடுகள் அந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதாகவும், உதாரணத்திற்கு, கல்வித்துறையினை மத்திய அரசுப்பட்டியலில் இருந்து மாநில அரசுப்பட்டியலுக்கு கொண்டு வருவதாக சொல்லி இருக்கின்றார்கள்.
கல்வித்துறையினை மாநில அரசுப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு எடுத்து சென்றதே, இந்த காங்கிரஸ் அரசு தான், இந்திராகாந்தி அவர்கள் நாட்டில் எமெர்ஜென்சி வரும் போது அப்படி செய்ததாகவும், தற்போது பாட்டி கொண்டு வந்த சட்டத்தினை திருப்பி பேரன் செயல்படுத்த இருப்பது தனக்கு விசித்திரமாக இருப்பதாக தெரிவித்த தம்பித்துரை, அடுத்தது நீட் தேர்வு, இந்த தேர்வினை கொண்டு வந்ததே, காங்கிரஸூம், தி.மு.க வும் தான் 2011 ம் ஆண்டு மெடிக்கல் கவுன்சிலிங்க் ஆதரவோடு, 2012 ம் ஆண்டு தேர்வு நடத்தியது.
அந்த தேர்விற்கு ஸ்டே ஆர்டர் தனியார் மருத்துவக்கல்லூரிகள் வாங்கியதையும் சுட்டிக்காட்டினர். இந்த நீட் தேர்வினை கொண்டு வந்ததே இந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தான் என்றும், அ.தி.மு.க வின் கொள்கையே எந்த வித நுழைவுத்தேர்வும் எழுதக்கூடாது என்பது தான் ஆனால், ராகுல்காந்தி, நீட் தேர்வை மட்டும் ரத்து செய்வதாகவும், ஆனால் மாநில அரசாங்கத்தில் மற்ற தேர்வுகள் நடத்தப்படும் என்று முரண்பட்ட கருத்தினை கூறியுள்ளார்.
100 நாட்களை 150 நாட்களாக மாற்றப்படும் என்று கூறியுள்ளார் ஏன் ? மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போதே கொண்டு வந்திருக்கலாம் என்றும், மேலும், கேரளாவில் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது. எப்போதும் அமேளியில் மட்டுமே போட்டி போடுபவர் ஏன் ? கேரளாவில் போட்டியிட வேண்டும் குழப்பமான நிலையிலேயே ராகுல்காந்தி இருக்கின்றார்.
மேலும், கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியாது என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க கட்சி கூட்டணிகள் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே டெல்லியில் 6 மாத காலங்களாக முகாமிட்டுருந்த நிலையில் சொன்னார். இந்திய ராணுவத்தின் உதவியோடு தான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தோம் என்று பகிரங்கமாக சொன்னார்.
அன்றைய காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தமிழர்களுக்கு துரோகம் செய்தது அந்த கூட்டணி, அந்த கூட்டணி வெற்றி பெற்றால் நாடே குழப்பத்தினை ஏற்பட்டு விடும், ஆகவே, நரேந்திர மோடி தான் இந்த பிரதமராக வருவார், அவரிடம் வேண்டுகோள் விடுத்ததினால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது. அதே போல தான் மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததற்கு பின்னர் தான் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அணை கட்ட மாட்டோம் என்று உத்திரவாதம் தந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தான் தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களை தரும் கூட்டணி என்றார். பேட்டியின் போது, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.