வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (16:32 IST)

நான் களத்துல இறங்குனா அதகளமாகிறும்... எச்.ராஜா வார்னிங்!!

தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேசியுள்ளார். 
 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் எச்.ராஜா. அவர் கூறியதாவது,  குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் நாட்டில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு ஆபத்து இருப்பது போல் திமுக உள்ளிட்ட கட்சிகள் தூண்டி விடுகின்றன.
 
இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு திமுக பிண அரசியல் செய்கிறது.  இவ்வளவு பேசுகிற ஸ்டாலின் ஏன் வண்ணாரப்பேட்டைக்கு வரவில்லை, அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். இந்து விரோத கட்சி திமுக போல் மறு தரப்பு தூண்டிவிட்டால் என்னாகும்? தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம் என எச்சரிக்கை விடுக்கும் தோணியில் பேசியுள்ளார்.