உயர்கிறதா பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம்.? 25% வரை உயர்த்த வாய்ப்பு..!!
தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்கல்வியை பொறுத்தவரை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், துணை மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட கல்வியியல் படிப்புகளுக்கெல்லாம் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 3 வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றுள்ளது. பொறியியல் படிப்புகளை நடத்தி வரும் தனியார் கல்லூரிகள் 25% வரை கட்டணம் உயர்த்த வேண்டும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை பெரியளவிற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை அதனால் இந்த முறை உயர்த்த வேண்டும் என அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட உள்ள கட்டண அறிவிப்பு 2026-27 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.