ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (12:23 IST)

விஜய்யின் தவெக-வில் செஞ்சி ராமச்சந்திரன் இணைகிறாரா.? எடப்பாடி பழனிச்சாமி நச் பதில்.!!

Vijay EPS
அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், அந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு தமிழக காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் விஜய் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
இதனிடையே அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சி நிர்வாகிகள் அணுகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது.

Vijay
செஞ்சி ராமச்சந்திரனுக்கு அழைப்பு?
 
அதிமுகவில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தற்போது போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதால், விஜய் கட்சியின் கோரிக்கையை ஏற்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என தகவல் பரவி வருகிறது. மேலும் அவருக்குக் அவைத் தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்றும்  பொன்விழாக் கண்ட இயக்கம் அதிமுக என்றும் தெரிவித்தார். அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தியை கிளப்புகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.