வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (09:18 IST)

தினகரன் அணியில் இருந்து திடீரென விலகும் நாஞ்சில் சம்பத்?

தமிழக அரசியலில் தினந்தோறும் பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய பரபரப்பாக தினகரனின் வலது கரமாக இருந்த நாஞ்சில் சம்பத், அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் டிடிவி தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற தனி அமைப்பை மதுரையில் பிரமாண்டமாக தொடங்கியுள்ளார். இது அரசியல் கட்சி அல்ல அமைப்பு என்று அவர் கூறி வந்தாலும் இதுதான் அவருடைய நிரந்தரமான கட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த புதிய அமைப்பு குறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை' என்று கூறியுள்ளார்.

எனவே அவர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு செல்வாரா? அல்லது வேறு திட்டம் உள்ளதா? என்பது இனிமேல்தான் தெரியவரும்