1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜனவரி 2024 (14:21 IST)

தமிழ்நாடு கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய தடையா? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

நாளை ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.



நாளை அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.


அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசியுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்றும் வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்பவதற்காக திட்டமிட்டு இவ்வாறு வதந்திகள் பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ அல்லது பிரதாசம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மைக்கு புறம்பான, உள்நோக்கம் கொண்ட இவ்வாறான தகவல்களை பரப்புவது வருத்தத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K