திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (15:36 IST)

''இவரா இந்தியாவைக் காக்கப்போகிறார்? ''-முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி

edapadi
"கறவை மாட்டைக் காணவில்லை" என்று திருமலை எனும் ஒரு ஆண் எழுதிய கடிதத்தை "கணவரைக் காணவில்லை" என்று படித்தவர் திரு. மு.க.ஸ்டாலின்   அவர்கள். இவரா இந்தியாவைக் காக்கப்போகிறார்?''என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், அதிமுக தலைமையில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்  இணைந்துள்ளன. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது;
 
''நேற்று தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் டாக்டர்.  R அசோகன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
 
தருமபுரி தொகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரின் நீண்டநாள் கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிட்ட அரசு அஇஅதிமுக அரசு.
 
இதனைக் கொள்கை என்று சொல்லிக்கொள்பவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கமாட்டோம் என்று சொல்லும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். இப்போது இவர்களின் கொள்கை என்னவாயிற்று? இது சந்தர்ப்பவாதம் அல்லவா?
 
"கறவை மாட்டைக் காணவில்லை" என்று திருமலை எனும் ஒரு ஆண் எழுதிய கடிதத்தை "கணவரைக் காணவில்லை" என்று படித்தவர் திரு. மு.க.ஸ்டாலின்   அவர்கள். இவரா இந்தியாவைக் காக்கப்போகிறார்?''