1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (10:41 IST)

அமமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையா? தேமுதிக கூட்டணி குறித்த அப்டேட்!

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தேமுதிக இப்போது அமமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இவர்கள் கேட்பதும் அவர்கள் கொடுப்பதாக சொல்வதுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் அதிமுக டெபாசிட் கூட ஒரு தொகுதியிலும் வாங்காது என தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் ஆவேசமாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவோடு கூட்டணி என்றும் தனித்து 140 தொகுதிகளில் போட்டி என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அமமுகவோடும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்ல்ப்படுகிறது. அவர்கள் 50 சீட் தரும் பட்சத்தில் அங்கே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.