திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (17:35 IST)

கொலை செய்யப்பட்ட அஸ்வினி திருமணம் ஆனவரா? திடுக்கிடும் தகவல்

சென்னையில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி அஸ்வினி. அழகேசன் என்ற வாலிபரால்ல்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் உஷா, அடுத்த நாள் அஸ்வினி என பெண்கள் கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் நாம் மகளிர் தினம் கொண்டாட தகுதியானவர்கள் தானா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவி அஸ்வினி ஏற்கனவே அழகேசனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அஸ்வினியின் காதல் திருமணத்தை விரும்பாத பெற்றோர் பிரித்து வைத்து உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும், தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உண்மைதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்