புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (13:18 IST)

மாத்திரைக்குள் இருந்த அபாயம்.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்

கோவையில் வாடிக்கையாளர் பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் ஓர் அபாயம் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த முஸ்தப்பா என்பவர், பல் வலி காரணமாக அருகில் உள்ள மெடிக்கல் கடையில் மாத்திரை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு வீட்டுக்கு வந்த முஸ்தப்பா மாத்திரையை பிரித்து பார்த்த போது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மாத்திரைக்குள் ஓர் இரும்பி கம்பி ஒன்று இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முஸ்தப்பா, உடனே மாத்திரை வாங்கிய மருந்து கடைக்கு சென்று முறையிட்டார். ஆனால் மாத்திரையின் கவரில் அரசு அங்கீகாரம் பெற்ற முத்திரை இருந்துள்ளது. ஆதலால் இந்த தவறுக்கு இந்த மாத்திரையை தயார் செய்த ரேக்சம் பயோடெக் பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனம் தான் பொறுப்பு என அந்த கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முஸ்தப்பா சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.