செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:03 IST)

தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் தந்தை பெரியார் சிலை… சீர்காழியில் அதிரடி முடிவு!

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை காவி சாயம் பூசப்பட்டதை அடுத்து சீர்காழியில் உள்ள பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைகள்  இரும்புக் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. அதையடுத்து பெரியார் சிலைக்கும் அந்த நிலைமை வந்துவிடும் போல இருக்கிறது. தொடர்ந்து பெரியார் சிலைகள் உடைக்கப்படுவதுமாகவும் அல்லது காவி சாயம் பூசப்படுவதாகவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் திருச்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்த நிலையில் சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.