வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (11:18 IST)

நள்ளிரவில் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: போர் ஆரம்பமா?

iran missile attack
ஈரான் மீது நள்ளிரவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று இஸ்ரேல் மீது ஈரான் குண்டுகளை வீசியதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அது மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றும் அச்சம் எழுந்தது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இந்த தாக்குதல் காரணமாக பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் காரணமாக ஈரான் நாட்டில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் வரும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தங்கம் , பெட்ரோல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மோசமாக சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran