புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (10:07 IST)

2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தால் இன்னும் சரிய வாய்ப்பா?

கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்த நிலையில் இன்று 300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது

இன்று காலை இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 354 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 44 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 78 புள்ளிகள் சார்ந்து 22,194 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தால் இன்னும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பங்குச்சந்தை உச்சம் செல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிடல், கோல்ட் பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா,  ஐடி பீஸ், ஆகிய பங்குகள்  சரிந்து  உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edited by Siva