செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (16:51 IST)

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று: சென்னையில் பரபரப்பு

சென்னையில் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் பிரபலங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சேப்பாக்கம் எம்எல்ஏ அன்பழகன், சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட ஒருசில பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி என்பவரும் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் துறையில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு சோதனை செய்தபோது கொரோனா தொற்று செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
டி.ஐஜி அந்தஸ்தில் உள்ள அந்த அதிகாரி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டரை இழந்து உள்ள காவல்துறை தற்போது ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் காவல்துறை பெரும் அச்சத்தில் உள்ளது 
 
இந்நிலையில் காவல்துறையில் உள்ள அனைவரும் தற்காப்புடன் பணியாற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது