1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (12:29 IST)

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்: முதல்வர் பழனிசாமி

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்
கொரோனா வைரஸ் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:
 
கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. கொரோனாவை தடுக்கவே முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவியுள்ளது.
 
கொரோனா வைரஸ் குறித்து அரசு ஊடகங்கள் உள்பட பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அரசு செய்து வருகிறது. நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் உதவியால் தற்போது பெருமளவு கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு செய்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். நோய் பரவுதலை தடுக்கவே ஊரடங்கு என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
 
கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின்படியே அரசு செயல்பட்டு வருகிறது. எனவே அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.