1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:14 IST)

காதலி வீட்டுக்கு மது போதையில் சென்ற காதலன் -ரகளையில் ஈடுபட்டு கிணற்றில் குதித்ததால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் விஜய் என்பவருக்கும் கொங்கணாபுரம் அருகேயுள்ள பாலப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் துர்காதேவிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
 
துர்கா தேவி திருச்செங்கோடு அருகே உள்ள  (விவேகானந்தா ) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்ற இந்நிலையில் துர்காதேவியின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த காதலன் விஜய்  காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது.
 
இதற்கு காதலி துர்கா தேவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலப்பட்டி அருகில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி விட்டு 4 முறை  குதித்தவர் 5 முறை மேலே வர முடியாமல் தவித்துள்ளார்.
 
இது குறித்து காதலியின் உறவினர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கும் எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  காதலன் விஜய்யை உயிருடன் பத்திரமாக மீட்டடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
அதன் பின்னர் போலீசார் காதலன் விஜயிடம்  எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
 
இதனை தொடர்ந்து துர்காதேவியும் விஜயுடன் செல்வதாக கூறியதால் அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.