1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:31 IST)

சரத்புரபுவின் உடலில் காயங்கள் : கொலை செய்யப்பட்டாரா?

டெல்லியில் யூசிஎம்எஸ் மருத்துவமனையில் மர்மான முறையில் இறந்து கிடந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்கலுக்கு மருத்துவப் படிப்பு படிக்க செல்லும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் மர்மமான முறையில் இறப்பது தொடர் கதையாகி வருகிறது. 
 
இந்த சம்பவங்களைத் தொடர்ந்தது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு என்பவர் டெல்லியிலுள்ள யூசிஎம்எஸ் (University College of Medical Sciences) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் கடந்த 17ம் தேதி காலை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் இன்சுலினை தனக்கு தானே செலுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியானது. அவரின் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அவரின் கழுத்து பகுதி இறுக்கப்பட்டது போல காயங்கள் இருந்தது. மேலும், அவரின் தலைப்பகுதியிலும் காயங்கள் இருந்தன. எனவே, அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி சரத்பிரபுவின் தந்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருந்தால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.