திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (21:12 IST)

மிசோரம் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு!

Election Commission
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.

இதில், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய அனைத்து மாநிலங்களில் வாக்குப்பதிவு  நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  வாக்குப் பதிவு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த  நவம்பர் 7 ஆம் தேதி 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.