1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:29 IST)

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

orange alert
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் டிசம்பர் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva