உலகிலேயே இந்தியாவில்தான் இறக்குமதி வரி அதிகம்… எலான் மாஸ்க் புகார்!

Last Updated: சனி, 24 ஜூலை 2021 (17:52 IST)

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க் உலகிலேயே அதிகமாக இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியாதான் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கும் நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடிவு செய்துள்ளனர். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையோ யானை விலை, குதிரை விலையாக இருக்கிறது.

மிழ்நாட்டை சேர்ந்த யூடியூபர் ஒருவர், இந்தியாவில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க் ‘உலகிலேயே இந்தியாவில்தான் இறக்குமதி வரி அதிகம். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது சம்மந்தமாக டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :