ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (15:42 IST)

இந்தியா கூட்டணி இந்த ஆண்டோடு முடிவுக்கு வரும்! – நடிகை குஷ்பூ கணிப்பு!

Khusboo
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி இந்த ஆண்டோடு முடிவுக்கு வரும் என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வரும் நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸோடு, திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்வரும் பொங்கலுக்கு பின்னர் கூட்டணி குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்க கூட்டணி கட்சிகள் சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி குறித்து பேசிய பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பூ “இந்த ஆண்டோடு இந்தியா கூட்டணி முடிவுக்கு வரும். மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸின் செல்வாக்கு தெரிந்துவிட்டது. சமாஜ்வாடியும் காங்கிரஸை தூக்கி சுமக்க தயாரில்லை. தமிழகத்தில் திமுகவை நம்பியே காங்கிரஸ் இருந்தாலும் வட மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியை காரணம் காட்டி திமுகவும் நிறைய சீட்டுகள் கொடுக்கப்போவதில்லை.

நடக்க போகும் பாராளுமன்ற தேர்தல் நாட்டை பாதுகாக்கும் தேர்தல். நாட்டை பாதுகாக்க யாரால் முடியும் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K