செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 மே 2019 (15:52 IST)

ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் !

ஆன்லைன் சீட்டாட்டம் தற்போது சமூக வலைதளத்தில் பெருமளவு பரவி வருகிறது. இளைஞர்களுடம் குறுகிற காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் பேராசையில் ஆன்லைன் ரம்மி சீட்டாட்ட விளையாட்டில் பணம் கட்டி இழந்து. கடைசியில் கடன் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துவருகிறது.


 
 
கடலூர்  மாவட்டம் பண்ருட்டி மேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு (75). இவரது மனைவி ராஜலட்சுமி, இவர்களுக்கு அருள்வேல் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ டி நிறுவனத்தில் வேலைசெய்து மாதம் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுவந்துள்ளார்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு அருள்வேல், திவ்யா என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அருவேலுக்கு ஆன்லைன் சீட்டாட்டத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இவ்விளையாட்டில் சுமார் 50  லட்சத்திற்குமேல் கடன்பட்டுவிட்டார்.
 
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அருள்வேலை பணம் கொடுக்குமாறு நச்சரிக்க இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து சென்னையில் இருந்து தன் தாய்வீட்டிற்கு அருள்வேல் வந்துள்ளார்.
 
பின்னர் நேற்று பிற்பகல் வேளையில் திவ்யாவின் உறவினர்கள், அருள்வேளை பார்க்க வீட்டிற்கு வந்தபோது அவர் மயங்கி இருந்துள்ளார். அவரது தாய் இறந்து கிடந்துள்ளார். 
 
இதனையடுத்து அருள்வேலை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.