செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (17:11 IST)

தேர்தல் நாளில் கடலூர் பெண் கொலை.. அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு

Annamalai
தேர்தல் நாளில் கடலூர் பெண் கொலை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடலூரில் தேர்தலன்று நடந்த கொலை சம்பவத்துடன் திமுகவினரை தொடர்புபடுத்தி எக்ஸ் தளத்தில் அன்ணாமலை பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் அளித்த புகாரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையும் உடனே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
 
அண்ணாமலை மட்டுமின்றி வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு. ஏற்கனவே, இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran