1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: வியாழன், 25 மே 2023 (21:28 IST)

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம்

ins vikranth
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவில் தரையிறங்கியது.

நேற்றிரவு அரபிக் கடலில் கப்பல் சென்று கொண்டிருக்கும்போது, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை விமானத்தை தரையிறங்குவது சவாலானது என்று கூறப்படும் நிலையில், இந்தியா இந்த சாதனையை செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்கடை, ''இரவு  நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலானது. ஆனால், இந்த சோதனையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்பது ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர் மற்றும் கடற்படை விமானிகளின் மனவுறுதியையும், திறமையையும்  நிரூபித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

மேலும் இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகள் கூறியுள்ளார்.