செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (16:16 IST)

சென்னை நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை: ரூ.500 கோடி சிக்கியதாக தகவல்!

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் ரூபாய் 500 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் மற்றும் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் உள்ள முக்கிய நகைக்கடை ஒன்றில் இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 814 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நகைக்கடைக்கு சொந்தமான 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறையினர் முடக்கியதாகவும் தெரிகிறது 
 
மேலும் கடந்த 2018-19ஆம் ஆண்டில் 102 கோடி ரூபாய் இந்த நிறுவனம் வருமானம் செய்துள்ளதாகவும் ஆனால் அந்த வருமானத்துக்கு ஏற்ற வரியைக் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பதையும் வருமான வரித் துறையினர் கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது
 
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது கணக்கில் வராத 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சோதனையில் சிக்கி உள்ளது என்றும் 150 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானம் ஈட்டியதை அந்நிறுவனம் ஒத்துக் கொண்டதாக கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது