1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2020 ஒரு கண்ணோட்டம்
Written By சினோஜ்
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (23:46 IST)

2020- ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்: ’’நம்ம நடராஜன்’’

natarajan

இந்திய கிரிக்கெட்டில் இதுவரை அதிகச் செல்வாக்குப் படைத்தவர்கள் பொருளாதார அளவில் சற்று வசதியானவர்களுமே கால்பதிந்திருந்த நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான  ஒருநாள் தொடர் மற்றும் டி-20 போட்டியில் களமிறங்க நாடராஜனுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது யாக்கர் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய மண்ணின் தன்மையை கரைத்துக்குடித்து அதன் சீதோஷ்ன நிலையை நன்கு அறிந்திருந்த அந்நாட்டு விளையாட்டு வீரர்களின் விக்கெட்டுகளையே சாய்த்தார். இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடராஜனுக்கு ’’யார்க்கர் கிங்’’ எனப் பட்டம் சூட்டியுள்ளது.இது தமிழ்மண்ணுக்கும் இந்தியாவுக்கும் கிடைத்தப் பெரும். வறுமையில் உழன்ற நடராஜனின் குடும்பத்தினர் சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் சில்லி விற்பனை செய்து வருகின்றனர். நடுத்தரக்குடும்ப அல்ல…ஏழைக்குடும்பத்தில் வறுமையில் வாடிக் கிடைந்தபோதும் மைதானத்திலேயே தவம் கிடந்து விளையாடி தனது திறமையை மெறுகேற்றியதாக நடராஜனைக் குறித்து அந்த சின்னப்பம்பட்டி கிராம மக்களும் இளைஞர்களும் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.  அந்த ஊரிலிருந்து மட்டுமல்ல இந்தியாமுழுவதிலுமுள்ள ஒட்டுமொத்த குக்கிராங்மங்களிலுள்ள இளைஞர்களின் மத்தியிலும் நடராஜன் ஒரு உற்சாகத்தையும் தந்துள்ளதுடன் உழைப்பும் திறமையும் சிறந்த பயிற்சியும் இருந்தால் எல்லோராலும் சாதிக்கமுடியும் என்று  நிரூபித்துள்ளார். கேப்டன் கோலியில் நம்பிக்கையைத் தற்காத்த தளபதியாக அவரது நெஞ்சிலும் இடம்பிடித்துத் தேசத்தாயின் செல்லப்பிள்ளையாகியிருக்கிறார்.

இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கி ளை நீதிமன்றம் விளையாட்டில் அரசியல் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்து, நடராஜன் அதிர்ஷ்டவசத்தால்  தேர்வாகியுள்ளதாகக்குறிப்பிட்டிருந்தது. நீதிபதிகள் கூறியதுபோல் சில பொருளாதாரபபலம் கொண்டவர்களின் அதிகாரத்தால், தேர்வு நிர்வாகிகளின் அலட்சியத்தாலும் ஏழ்மையான சிறுவர்களின் திறமைகளும் கனவுகளும் பாழ்படும் நிலைமையை எல்லா இடங்களிலும் காண்கிறோம். எல்லாப் பிள்ளைகளையும் தன்பிள்ளைகளைப் போல் கருதும் தாய்மார்களைப்போல் இந்தியாவிலுள்ள திறமையானவர்கள் இந்தியத்தாயின் வெற்றிப் பெருன்மைக்காகவே விளையாடிப் பரிசு பெருவதாக நினைத்துக் கொண்டு, ஒருசில அதிகார மையத்திடம் குவிந்துள்ள பதவியை சரியான பாதையில் காட்டினால், இன்னும் எத்தனையோ நடராஜன்கள் இந்தியாவின் புகழை உலகளவில் அலங்கரிக்கத் காத்திருக்கிறார்கள்..அவர்களின் ஆர்வத்தைக் தேடித் துளாவிக் கண்டு பிடிப்பவர்களே வருங்கால வல்லரசு இந்தியாவின் ரட்சகன்கள் ஆவர்.

 சினோஜ்