வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:32 IST)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் அதாவது நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில்  மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நாளை கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Edited by Siva