புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (12:31 IST)

பொய் செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ‘’வாட்ஸ் அப் ’’

சமீபகாலமாக தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவுக்கு தீமைகளும் அதிகரித்து வருகின்றன. சிலர் வேண்டுமென்றே பொய் செய்திகளையும் அவதூறுகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பி வருகின்றனர். இதனால் ஆராய்ந்து உண்மைத் தன்மைகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுகிறது. இதனால் பல அபாய விளைவுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தன.
இந்நிலையில் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவதை தடுக்க கூகுளின் search by image என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் தனது பீட்டா வெர்ஷ்னில் வழங்கியுள்ளது.
 
இதன்மூலம் ஒருவர் பகிரும் ,புகைப்படம் மற்றும் செய்திகள் என்பது கூகுளின் நம்பத் தகுந்த நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்ட புகைப்படமா இல்லை போலியாக செய்திகளா என்பதை அறியும் வசதி ’வாட்ஸ் அப்’ பீட்டா வெர்ஷனில் உள்ளது.