1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (14:14 IST)

பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராவிட்டால் வழக்கு: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி செய்து தராவிட்டால் அந்த நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் நகை கடைகள் துணிக்கடைகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 
 
ஆனால் தமிழகத்தில் உள்ள பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை இல்லாத நேரத்தில் இருக்கை வசதி செய்து தரவில்லை என்பது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆய்வில் 1407 நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொழிலாளர்கள் நலத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran